10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

Must read

மதுரை:
துரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இந்த நிலையில் மருந்தகம் மருத்துவ சார்ந்த மருத்துவ மனைகள் அத்தியவசியமான தேவையான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் மதுரை தெற்குவாசல் பகுதியில் வசித்து வருபவர் முரளி கண்ணன் பழங்காநத்தம் மருதுபாண்டி நகர் பகுதியில் ஓம் முருகா கிளினிக் என்று அரசு மருத்துவர் என்று கூறி பத்து வருடங்களுக்கு மேலாக மருத்துவமனை நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சையில் சந்தேகம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு போலி மருத்துவர் மருத்துவமனை நடத்தி வருவதாகபுகார் அளித்தார்.

அதனடிப்படையில் மருத்துவ இணை இயக்குனர் சிவகுமார் நிர்மலா தேவி மருந்துகள் ஆய்வாளர் எஸ் எஸ் காலனி ஆய்வாளர் அருணாச்சலம் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலி டாக்டர் முரளி கண்ணனை கைது செய்து விசாரணை செய்தனர் விசாரணையில் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும தெரிவித்தார்.

இதனை அடுத்து மருத்துவமனையை சீல் வைத்து எஸ் எஸ் காலனி போலீசார் போலி டாக்டரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More articles

Latest article