அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகள், ராஜேந்திர சோழனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் நவீன உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்எ னறும், இதற்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கத் தென்னரசு தெரிவித்து உள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் அல்லது கங்கைகொண்டசோழீஸ்வரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 250 ஆண்டுகளுக்கும் மேலாக சோழ வம்சத்தின் தலைநகராக இருந்த கங்கைகொண்ட சோழபுரம் என்றழைக்கப்படும் ஒரு பகுதியாக இருந்த பழங்கால நகரத்திலிருந்து இந்த கோயில் அதன் பெயரைப் பெற்றது. இது ஐராவஸ்தேஸ்வரர் கோவில் மற்றும் பிரகதீஸ்வரர் கோவிலுடன் சேர்ந்து ‘மூன்று பெரிய சோழர் கோவில்களின்’ ஒரு பகுதியாகும்; யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களிலும் இக்கோவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார்.
பிரதான கோவில் கோபுரம் 55 மீ உயரம் கொண்டதாகவும் கம்பீரமானதாகவும் உள்ள கட்டிடம் ஆகும். செழுமையான கலை மற்றும் சிற்பங்களால் நிறைந்திருக்கும் இக்கோவில் வளாகத்தை முற்றிலும் பிரமாண்டமான கலைஞர்களின் ஆக்கம் அலங்கரிக்கின்றது. அற்புதமான இக்கோவில் ஒரு உயரமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அற்புதமான முற்றம் உள்ளது. பெரும்பாலான சிவன் கோவில்களைப் போலவே, பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரமுள்ள சிவலிங்கமாக திகழ்கிறது. கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது. கோவில் மற்றும் நகரத்தின் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அந்த இடத்திற்கு அதன் பெயர் வந்த விதம்.
சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திரன் தனது படையை இந்தியாவின் வட பகுதிகளை நோக்கி புனித நதியான கங்கையில் இருந்து தண்ணீர் எடுக்க அனுப்பினார். வழியில் பல எதிரிப் படைகளை தோற்கடித்து வெற்றியுடன் தாய்நாட்டிற்கு திரும்பி வந்தனர். இதனால் கங்கைகொண்ட சோழன் அல்லது கங்கையை வென்றவன் என்ற புனைப்பெயரை அவர் பெற்றார். எனவே அவர் ஒரு புதிய தலைநகரை நிறுவியபோது அதற்கு கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டார், பின்னர் கோவில் கட்டப்பட்டபோது அதுவும் அதே பெயரைப் பெற்றது. இதை நவீனப்படுத்தவும், அருங்காட்சியகம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
இதையடுத்து, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகள், ராஜேந்திர சோழனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் நவீன உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை தொல்லியல் துறை அமைச்சரும் நிதி அமைச்சருமான தங்கம். தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தின் பரப்பளவு. மேலும் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகளையும், குறிப்பாக ராஜேந்திர சோழனின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அருங்காட்சியகம் எந்த இடத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை கண்டறிய, தற்பொழுது ஆய்வு மேற்கொண்டேன். இதில் இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் உள்ள இடம் மற்றும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய குருவாலப்பர் கோவில் உள்ளிட்ட இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடம் சிறப்பாக இருக்கும் அதிக அளவு பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய இடமாக இருக்கும் என்பதை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.