சென்னை; முன்னாள் பிரதமரை கொன்ற இலங்கைவாசிகளுக்கு உதவ ஒருநாள் சம்பளத்தை எடுப்பதா? என தமிழக அரசுக்கு எதிராக தலைமைக் காவலர் ஒருவர் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசுக்கு மத்தியஅரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது. பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதைத்தொடர்ந்து,  தமிழகஅரசும், அங்கு பரிதவிக்கும் தமிழ் மற்றும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், அரிசி, மருந்து உள்பட அடிப்படை உதவிகளை வழங்கி வருகிறது. அதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களும், தன்னார்வலர்களும் உதவ வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இலங்கைக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள் என்றும் அறிவித்தார். தொடர்ந்து,   தமிழகஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை இலங்கை மக்களுக்கு உதவ வழங்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக என்.ஜி.ஓ சங்கம் சார்பில் முதலமைச்சரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் தலைமைக்காவலர் ஒருவர், முன்னாள் பிரதமரை கொன்ற இலங்கை மக்களுக்கு தனது ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக 6 காரணங்களை சுட்டிக்காட்டி உள்ளதுடன், தனது ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

சென்னை உயர்நீதி மன்ற பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக்காவலர் எம்.ஜனார்த்தனம் என்பவர், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அதில், தனது ஒரு சம்பளத்தை கொடுக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு காவல்துறையில் 18ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாடு அரசு சார்பாக, அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக விட்டுக்கொடுக்க கீழ்க்காணும் காரணங்களால் தனக்கு விருப்பம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் தெரிவித்து உள்ளார்.

1. நமது பாரத பிரதமரை கொன்றவர்கள் இலங்கை நாட்டின்

2. நமது தமிழ் இனத்தை கொன்றது இலங்கை அரசாங்கம்

3. பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோத, அதில் காவல்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் இலங்கையர்.

4. அரசு ஈட்டிய விடுப்பு ஒப்புவித்த, பற்ற பணபலனை தற்போது, ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தல் ஆணையை அரசு ரத்து செய்ததால், ஆண்டு 15நாள் ஊதிய பலன் பாதிக்கப்பட்டுள்ளது.

5. தற்போது மத்தியஅரசு டிஏ அறிவித்துஉள்ளது. ஆனால், தமிழகஅரசு அதை இன்றுவரை அறிவிக்கவில்லை.

6. நீதியரசர் திரு.கிருபாகரன் பலமுறை காலர்களுக்கான ஊதியம் குறைவினை ஏற்றி தர கோரியும், அதற்கு தமிழகஅரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

மேலும்,  தன்னை மிஞ்சிதான்தான தர்மம். ஆகையால் அரசு அண்டை நாடான இலங்கைக்கு உதவி செய்தல்ல நல்ல எண்ணம். ஆனால், எனது குடும்பத்தை பராமரிக்கவே என்னுடைய சம்பளம் போதுமானதாக இல்லை என்பதை தெரிவித்துக்கொள்வதுடன், எனது ஒரநாள் ஊதியத்தை அரசுக்கு விட்டுக்கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளர்.

தலைமைக்காவலரின் கடிதம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.