ட்ரோன் (ஆளில்லா குறு விமானங்கள்) உலக அளவில் வீட்டுப்பொருட்களை கொண்டு சேர்க்க பெரிதும் ஆய்வுசெய்யப்பட்டு அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் செயல்படுத்திவருகின்றன.

இந்தியாவில் இப்போதுதான் ட்ரோன் பயன்படுத்தும் கொள்கை முடிவுகளே அறிவிக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பால்டிமோரில் உள்ள மருத்துவமனையில் இருந்து மேரிலாண்டில் உள்ள மருத்துவமனைக்கு உடல் உறுப்பு மாற்ற சிகிச்சைக்காக  ட்ரோனில் வைத்து மனித உறுப்பு அனுப்பப்பட்டுள்ளது மனித வரலாற்றில் ஒரு மைல்கல்.

இதற்காக 8 தானியங்கு சுழற்றிகளும், சிறந்த கட்டுப்பாட்டு நுட்பமும் உருவாக்கப்பட்டு எந்த சூழ்நிலை யிலும் செயல்பாட்டுக்கு தடையில்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த  ட்ரோனில் கேமிரா மற்றும் பாராசூட்டும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு குறு விமானங்கள் அடிப்படையில் செலவு குறைந்தவை, அதனால்தான் பொருட்கள் விநியோகத்திற்காக ட்ரோனை பயன்படுத்தலாம் என்ற பணிகள் நடந்துவரும் சூழ்நிலையில் உடல் உறுப்புக்களையே வைத்து விநியோகம் செய்துள்ளனர், இதன் மூலம் மனிதனின் ஆயுட் காலத்தைக் கூட்ட உதவும் தங்கள் முயற்சியில் இந்த புதிய தொழில்நுட்பமும் இணைந்துள்ளதில் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் நாள்தோறும் பல்வேறு மோதல்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர். அதே சமயம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பல ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்., இந்த பெரும் இடைவெளியினை நிரப்ப டிரான் தொழில்நுட்பமும் பெறும் பங்களிப்பினைச் செய்யும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனாலும் இதில் பின்விளைவுகள் நிறையவே உண்டு. ஏனெனில் பெரு நகரங்களில் வான்வெளி எப்போது பயன்பாட்டில் இருக்கும், அந்தச் சூழ்நிலையில் இதுபோன்ற ட்ரோன் பயன்பாட்டுக்காக விமானங்களை நிறுத்தி ஆம்புலனஸ்க்கு வழிகொடுப்பது போல் இதற்கு வழி கொடுக்க முடியுமா? என்றெல்லாம் ஆய்வுகளை செய்யவேண்டியதிருக்கிறது.

இப்படிப்ப சூழ்நிலைக்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்பதையே நாம் முதலில் ஆய்வு செய்யவேண்டியதிருக்கிறது

-செல்வமுரளி