இஸ்லமாபாத்:

1.7 டன் எடையுள்ள கற்களை தூக்கி 4 வயது ஓட்டகம் போட்டியில் வென்றது.


ஓட்டகங்கள் மீது கற்கள் நிரம்பிய மூட்டைகளை வைக்கின்றனர். எந்த ஒட்டகம் அதிக எடையை தூக்கி நிற்கிறதோ, அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

பாகிஸ்தானில்  இந்த ஒட்டகப் போட்டி பிரசித்திபெற்றது. இந்த போட்டியை காண 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இங்கிலாந்தை சேர்ந்த காசிம் ஹுசைன் என்பவருக்கு சொந்தமான 4 வயது ஒட்டகம் 1.7 டன் எடையுள்ள கற்களை தூக்கி நின்று வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒட்டகங்கள் அதி புத்திக்கூர்மை கொண்டவை. அவற்றை கொடுமை படுத்துவது சரியல்ல என்று விலங்குகள் நல ஆர்வலர் எலிசா ஆலென் கூறியுள்ளார்.