ஹீத்ரு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் விமானத்தின் மூக்கு பகுதி சேதம்! விபத்தா?

Must read

ஹீத்ரு: போயிங் 787 ரக பிரிட்டிஷ் சரக்கு விமானம் ஹீத்ரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த  விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமானம் தரையில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோவில் எப்போதும் விமானங்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய விமான நிலைய செய்தி தொடர்பாளர், இது ஒரு சரக்கு விமானம் என்றும், அதில் பயணிகள் யாரும் இல்லை என்றும்  கூறியதுடன், இந்த சரக்கு விமானம் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் முன்பகுதி சேதமடைந்துள்ளது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  பாதுகாப்பு எப்போதும் எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை என்று தெரிவித்து உள்ளனர்.

சேதமடைந்த விமானத்தைச் சுற்றி போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், விமான தரையிறங்கும்போது,   விமானம் தரையில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தின் முன்பகுதியான லேண்டிங் வீல் புகைப்படத்தில் காணப்படாததால்,  விமானம் தரையில் மோதியதால்தான் விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்து இருப்பதாக  விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் காரணமாக, இங்கிலாந்தின் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோவில் உள்ள பிற விமான  சேவைகள்பாதிக்காது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article