சந்தானம் நடித்துள்ள ‘ஏ 1’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, சன் டிவி வாங்கியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானத்துடன் சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய ,சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லியோ ஜான் பால் எடிட் செய்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. ரூ. 4.60 கோடிக்கு ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.