தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80-களை கலக்கியவர் ராதிகா. 20 வருடங்களை சின்னத்திரை சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராதிகாவின் மகளான ரயானே மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். பிறந்து 4 மாதங்களே ஆன தனது மகள், தன்னை கடித்துவிட்டதாக மூத்த மகன் சொல்லும் வீடியோவை ரயானே பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CDA3XKZDJhn/
”இவனின் 4 மாத தங்கச்சி, கடித்துவிட்டாளாம். நம்மளை முட்டாள் என்று நினைக்கிறானோ” என க்யூட்டாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து ராதிகாவின் பேரன் செய்யும் இந்த குறும்பு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.