தெலுங்கு நடிகர் ராணா கடந்த 12ம் தேதி தான் மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார். அந்த ட்வீட்டை பார்த்து பலரும் வியந்தார்கள்.
இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
அதைத்தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ராணா.
இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 8-ம் தேதி ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் . ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, ஹைதராபாத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராணா வீட்டிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறவுள்ள திருமணம் எங்கு என்பதில் மட்டும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.