லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய்.
இதனிடையே, இந்தப் படத்துக்காக சம்பளக் குறைப்பு, பட்ஜெட் குறைப்புக்கு சன் பிக்சர்ஸ் பேசியதாகவும் அதற்கு விஜய் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ந்தப் படத்தை மாற்றிவிட்டதாகவும் செய்தி வெளியானது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் சம்பளக் குறைப்புக்காகப் பேசியிருக்கிறார்கள்.’தளபதி 65′ படத்தைப் பொறுத்தவரை இன்னும் பட்ஜெட் பற்றி பேசவே இல்லை இந்த செய்தி முற்றிலும் தவறு என கூறியுள்ளனர் .