இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் நேற்று மரணம் அடைந்தார்.
கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர் போன்ற பல படங்களில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் .
நாலுபேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார். கற்க கசடற என்ற படத்துக்கும் வசனம் எழுதி உள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..