சென்னை:
தமிழகத்தில் 10, 12வது வகுப்பு மாணாக்கர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகம் விநியோகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்த நிலையில், இன்றுமுதல் பள்ளிகள் பாடப்புத்தகம் விநியோகம் தொடங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிகைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கங்ள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணையதள வாயிலாக கல்வி போதித்து வருகிறது. தமிழகஅரசும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் கல்வி போதிக்க திட்டமிட்டு உள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யும் நிகழ்வு நேற்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டிருந்த டிவிட்டில், கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்காக கல்வி தொலைக்காட்சி வாயிலாக (திங்கள் – வெள்ளி) தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் துவக்கி வைத்தேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று முதல் பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணாக்கர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன. தமிழகஅரசின் அறிவுறுத்தலின்படி, அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக விலகளுடன் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Patrikai.com official YouTube Channel