‘திமிரு’ ‘வெயில்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதற்குப் பிறகு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது வேல்மதி இயக்கத்தில் ‘அண்டாவ காணோம்’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘அண்டாவ காணோம்’ படம் தொடர்பாக ஸ்ரேயா ரெட்டி வெளியிட்டுள்ள ட்வீட்டில்


” ‘அண்டாவ காணோம்’ எப்போது ரிலீஸ் ஆனாலும் அது நிச்சயமாக காத்திருப்பின் பலனாக இருக்கும். அதன் கதை அபாரமானது. ஏன் நான் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். பெயருக்காக என்னால் ஒரு படத்தில் நடிக்க முடியாது. அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் பொருந்துவேன் என்று உண்மையில் நம்பினால் மட்டுமே நான் அதில் நடிப்பேன்” என பதிவிட்டுள்ளார் .