Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம்… தமிழகஅரசு

Jul 9, 2020
சென்னை:
தனியார் கல்லூரிகள், பள்ளிகள்  கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக்கட்டணத்தை செலுத்தும்படி மாணவர்களை வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக புகார்களை தொடர்ந்து,   மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் கடந்த  விசாரணையின்போது, தமிகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,. தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்றும், அதேசமயம் பெற்றோர் விருப்பப்பட்டால் பள்ளி கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என்றும் அரசு தெரிவித்தது.
இதையடுத்து, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று   கல்விக்கட்டணம் தொடர்பான திட்டத்தை வகுக்க  தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில்,  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உயர் கல்வித்துறை  சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க  தமிழக அரசு அ னுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்றும், அதே நேரத்தில் தமிழகத்தில்  கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திறப்பு பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து சில அத்தியாயங்கள் நீக்கம்… கமலஹாசன் விமர்சனம்
தமிழகத்தில் சேலம் உள்பட 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer