உலகம் முழுவதும் கொரோனாஅச்சுறுத்தலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமாத் துறையில் உள்ள நடிகர்கள் முதல் தினக் கூலி பணியாளர்கள் வரை அனைவரும் வேலையின்றி வருமானமின்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில் ‘ஒரு மழை நான்கு சாரல்’, ‘மௌன மழை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சென்னை மவுலிவாக்கத்தில் மளிகை கடை வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
தனது நண்பருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதில் மளிகைக் கடையை தொடங்கியுள்ளார் ஆனந்த்.