மஞ்சுவாரியார் ரோலுக்கு சுஹாசினி..
நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ மலையாள படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார்.
வசனங்களிலும்,சண்டைக் காட்சிகளிலும் நெருப்பு பறந்த இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலித்தது.
‘ மோகன்லாலுக்கு இந்த படம் மிகப்பெரிய ரீ- எண்ட்ரி’’ என அவரது ரசிகர்கள் கொண்டாடிக் குதூகலித்தனர்.
இந்த படத்தைத் தெலுங்கில் ரீ-மேக் செய்யும் உரிமையைச் சிரஞ்சீவி வாங்கியுள்ளார்.
தெலுங்கு படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார்.( மோகன்லால் வேடம்)
லூசிபர் படத்தில் மஞ்சுவாரியார் நடித்திருந்த வேடத்தில், தெலுங்கில் விஜயசாந்தி நடிப்பதாக இருந்தது.
இப்போது அந்த வேடத்தில் நடிக்க நம்ம ஊர் சுஹாசினியை அணுகி உள்ளனர்.
தெலுங்கு லூசிபரை ’’சாஹோ’ புகழ் இயக்குநர் சுஜீத் டைரக்ட் செய்கிறார்.
ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
-பா.பாரதி