சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த எந்திரன் படம் தமிழில் சைன்ஸ் பிக்ஸனில் பிரமாண்ட படமாக உருவானது. அப்படத்தில் வெள்ளி முலாம் பூசிய சிலைபோல் ரஜினியின் ஒரு புகைப்படம் அபோது வெளியாகி கவனத்தை கவர்ந்தது. கிராபிக்ஸ் டிசைனில் உருவாக் கப்பட்ட ஸ்டில் என்று பலரும் நினைத் திருந்த நிலையில் அது ஒரிஜனல் என்ற ரகசியத்தை வெளியிட்டிருகிறார் பட கேமராமேன் ரிச்சர்ட் எம்.நாதன்.


அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள மெசேஜில்,’இந்த போட்டோ ஷீட்டை எந்திரன் படத்துக்காக 2008ம் ஆண்டு எடுத்தபோது நான் பணியாற்றினேன். பலரும் ரஜினியின் இந்த தோற்றம் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என பேசினார்கள். ஆனால் உண்மையிலேயே தலைவர் ரஜினியின் உடம்பில் சில்வர் பெயின்ட் பூசப்பட்டு படமாக்கப் பட்டது. இதற்காக அவர் பெரிய வலியை பொறுத்துக்கொண்டார். ரஜினியின் அந்த உருவம் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது கிடையாது’ என்றார் ரிச்சர்ட் எம்.நாதன்.