சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.14.69 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக கொவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 5 கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை யடுத்து, தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இருந்தாலும், ஏராளமானோர் தடையை மீறி வெளியே சென்று வருகின்றனர். அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்யும் காவல்துறை, அபராதம் வசூலித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (23-06/2020) காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக 7,04,113 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 5,17,497 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் 6,48,809 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஊரடங்கை மீறியோரிடம் இருந்து அபராதமாக மட்டும் ரூ.14.69 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.