Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? சென்னை உயர்நீதி மன்றம்

Jun 23, 2020

சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை செய்யக் கோரிய வழக்கில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து பதில் அளிக்க சென்னை கண் மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும  அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.  மீண்டும் திறப்பது எப்போது என்பது குறித்து உறுதியான தகவல்களை மத்திய மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில்,  பல தனியார் பள்ளிகள்,  நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக  நடத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில்,  ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க வேண்டும்,   6 முதல் 12ம் வகுப்பு வரை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளின் போது மடிக்கணினி மற்றும் மொபைல் போன் திரைகளில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகள் நீண்ட  நேரமாக வெளிப்படுவதால் குழந்தைகளின் கண்களுக்கு ஏற்படக்கூடிய சிரமம் குறித்து சென்னை அரசு கண் மருத்துவமனையின் டீன் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறறுத்தி உள்ளது.

முன்னதாக ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post navigation

23/06/2020: ராயபுரத்தில் 6484 ஆக உயர்வு – சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்
ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.14.69 கோடி அபராதம் வசூல்

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer