தளபதி விஜய்க்கு இன்று 46வது பிறந்ததினம் அவருக்கு ரசிகர்கள். நடிகர், நடிகை, இயக்கு னர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகை இன்று ரசிகையாக மாறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிரபல நடிகை லிசி. இவரது மகள் கல்யாணி. இவர் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்பதுடன் ’ஹீரோ’ படத்தில் சிவகார்த்தி கேயன் ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷினி. இன்று விஜய்க்கு 46 வயது பிற்ந்ததினத்தை யொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டார் கல்யாணி. ’நார்மலாக டிவிட்டரில் மெசேஜ் வெளியிடும்போது ஒரு நடிகை என்ற எண்ணத் தோடுதான் எனது மெசேஜ்களை வெளியிடு வேன். ஆனால் இன்று விஜய் சார் பிறந்த நாள். இன்றைக்கு அவருக்கு வாழ்த்து சொல்வதற் காக நான் ரசிகையாக மாறிவிட்டேன். தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என தெரிவித்திருக்கிறார்.