மதுரை:
கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனாவுக்கு சித்தாவில் மருந்து உள்ளது; அதை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சித்த மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, மனு மீது பதில் அளிக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கேள்விக்கு ஏன் இன்னும் பதில் அளிக்கவில்லை என்று கேட்ட நீதிபதிகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை போன்றவற்றை எந்த சோதனையின் அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குகிறீர்கள்? என்றும் வினவினர்.