மல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் இயக்கி வருகிறார் ஷங்கர். படப்பிடிப்பில் விபத்து, லாக் டவுன் ஊரடங்கு போன்றவற் றால் படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது. லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும் படப் பிடிப்பு தொடங்க உள்ளது.


சமீபத்தில் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குநர்களைப் பற்றி ஷங்கர் கூறினார். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், அருவி புகழ் அருண் பிரபு புருஷோத்தமன், சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் இயக்குனர் எச் வினோத் ஆகியோரின் படங்களை ஷங்கர் பாராட்டினார்.
சில்லு கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா ஷமீமின் பணியையும் ஷங்கர் பாராட்டினார்.
அவரது இயக்கத்தில் வரவிருக்கும் மின்மினி குறிப்பிட்டு அப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.