வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பிரிட்டன் இளவரசி டயானாவின் வாழ்க்கை மீண்டும் திரை வடிவம் பெறுகிறது.
2013-ல், நயோமி வாட்ஸ் நடிப்பில் முதன்முதலில் ‘டயானா’ என்ற பெயரில் அவரது வாழ்க்கை படமாக்கப்பட்டது.
அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையில், ஆலிவர் ஹைர்ஷ்பெய்கல் இயக்கத்தில் ‘டயானா’ திரைப்படம் வெளியானது.
டயானாவின் சுபாவத்தை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரிக்காமலும் அமைக்கப்பட்டிருந்ததால் படம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் பிரிட்டன் இளவரசி டயானாவின் வாழ்க்கை மீண்டும் திரை வடிவம் பெறுகிறது.
இப்படத்தை இயக்கவிருப்பவர் பாப்லோ லரய்ன். இவர் ஜான் எஃப்.கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடியின் வாழ்க்கையை அற்புதமான திரைக்கதையுடன் ‘ஜாக்கி’ எனும் பெயரில் படமாக்கியவர். 2016-ல், வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அது. இவர் கவிஞர் பாப்லோ நெருடாவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து ‘நெருடா’ என்ற திரைப்படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.