அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெண்குயின்’ நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கீர்த்தி சுரேஷ்.
அதில் “அப்பா தயாரிப்பாளர், அக்கா இயக்குநர், அம்மா – பாட்டி நடிகை என்பதால் குடும்பப் படம் உருவாகுமா” என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷ்
“குடும்பப் படம் கூடிய விரைவில் நடக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அக்கா கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அப்பாவும் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். ‘பெண்குயின்’ கதையைப் படிப்பது மாதிரி ஒரு வீடியோ பார்த்திருப்பீர்கள். அது நாங்கள் குடும்பமாகப் படமாக்கியதுதான்.
அக்காதான் இயக்கினார். அப்பா – அம்மா – பாட்டி எல்லாம் உதவிகரமாக இருந்தார்கள். அப்போது பாட்டி, ‘நான் நடிக்கும் போதுகூட 6 மணிக்கு மேல் எல்லாம் நடித்தது கிடையாது’ என்றார். ஏனென்றால் நாங்கள் இரவு 2 மணிக்கு ஷூட் பண்ணினோம். ‘இத்தனை நாளாக தயாரிப்பாளராக இருக்கிறேன். என்னை லைட்பாயாக ஆக்கிவிட்டாயே’ என்று அப்பா கூறினார்”.என கூறினார் .