திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தியேட்டர்கள் முன்பு போலவே பார்வையாளர்களை ஈர்க்கும் என நம்புகிறார்.
தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று கார்த்திக் கூறுகிறார். அதே நேரத்தில், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கருதுகிறார்.
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் விவேக் ஹர்ஷன் ஆகியோர் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை காத்திருப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த கட்டத்தில், OTT தளத்திற்கு படத்தைக் கொடுப்பது பற்றி தங்களுக்கு எந்த ஐடியாவுமில்லை என தெரிவித்துள்ளனர் .