விஷால் நடித்த ’ஆம்பள ’ படத்தில் ஹன்சிகா உள்ளிட்ட 3 ஹீரோயின்களில் ஒரு ஹீரோயினாக நடித்தவர் மாதவி லதா. இவர் தெலுங்கில் மகேஷ்பாபு உள்ளிட்ட வர்களுடன் நடித்திருக்கிறார். குறைந்தள வே படத்தில் நடித்திருக்கும் இவர் திடீரென்று அரசியலில் குதித்தார். பா.ஜ கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார்.


சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கும் மாதவி லதா சமீபத்தில்,’பல மாதங்க ளுக்கு பிறகு நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அதிசயம் நடந்திருக்கிறது. எப்போதும் நான் அதிர்ஷ்டம் அதிசயத்தை நம்புபவள். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதற்கு காரணம் என்ன என்பதை விரைவில் சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
’நடிப்பு அல்லது அரசியலிலிருந்து விலகப்போகிறீர்களா?’ என்று கேட்ட தற்கு அதெல்லாம் இல்லை என்றவர். ’உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறதா?’ என்றதும் அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் காத்தார். அவரது திருமண தகவல்தான் அவரது சந்தோஷத்துக்கு காரணம் என ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். உண்மை யில் மாதவி லதா என்ன சொல்லவிருக்கி றார் என்பதை அவரே சொன்னால்தான் தெரியும்.