கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகஅரசு கடந்த இரண்டு மாதங்களாக ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால், ஜூன் மாதம் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், ரேசன் கடைகளில் மக்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், தினசரி 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள ரேசன் பொருட்களுக்கு வரும் 29ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.