பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சுஜாதா விஜயகுமார், நடிகை குஷ்பூ, நடிகர் மனோபாலா உள்ளிட்டோர் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி :- சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும், 20 நபர்கள் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் செய்து குறைந்தப்பட்சம் 60 நபர்கள் கொண்டு படபிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை வைத்ததாக கூறினர்.
தொடர்ந்து பேசிய நடிகை குஷ்பு,படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்த பின்னர் ஓரிரு நாளில் படப்பிடிப்பை துவங்குவோம் என தெரிவித்தார்.