சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பில் 75 சதவிகித பாதிப்பு சென்னையிலேயே உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,131 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின், கொரேனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட 50 வயதுடைய நபர் தொற்று உறுதி செய்யப்பட்டு நேற்று மதியம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.