
தமிழ் ஹிந்தி என வலம் வந்த நடிகை ஷில்பா ஷெட்டி . இவர், கடந்த 2009-ம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2012-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் தனது இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டதாக ஷில்பா ஷெட்டி பேட்டி அளித்துள்ளார் .
இத்தகவலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்
https://www.instagram.com/p/B__qYPhBMgK/
அதில் ஷில்பா ஷெட்டி கூறும்போது, என் மகனுக்கு சகோதர உறவோடு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் குழந்தை பெற்றுக் கொள்ள தயாரானபோது இருமுறை நான் கருத்தரித்தும் எனக்கு இருந்த உடல்நலக் குறைபாட்டினால் கரு வளராமல் கருச்சிதைவு ஏற்பட்டது. பின்னர் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்” என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்திருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel