மதுரை:
ஒரு கையில் மது, மற்றொரு கையில் கபசுர குடிநீரா…. தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்து வழக்கை ஒத்தி வைத்தது.
அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க, கபசுர குடிநீரையும் மறு கையில் அதனை பாதிக்கும் மதுவையும் வழங்குவது முரண்பாடாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை உயர்நீதி மன்ற கிளையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது
மனுவில்,  மது அருந்துதல் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும் நிலையில் அதனை பயன்படுத்துவோர் எளிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புஎ உள்ளது. எனவே, ஆகவே டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பதோடு, எந்த வகையிலும் மது விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வீடியோ  காண்பரன்சிங் மூலம் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ”டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினார்.
இதற்கு மனுதாரர் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். சமூக விலகல் கடைபிடிக்கவில்லை என்றும், அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து வாதிட்ட அரசு வழக்கறிஞர்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே?”  என்று கேள்வி எழுப்பியதுடன், வழக்கை  ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.