உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது பல பிரபலங்களும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டும் குணமடைந்து வருகிறார்கள் ஒரு சிலர் இறந்தும் உள்ளார்கள் .
பிரபலங்களில் முதல் நபராக கொரோனாவுக்கு பாதிக்கபட்டவர் டாம் ஹாங்ஸ் என்ற நடிகர் தான்.அதிர்ஷ்டவசமாக அவரும் அவர் மனைவியும் நல்ல முறையில் நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.
சமீபத்தில் பேட்டி கொடுத்த அவர், கொரோனா காலத்தில் அவர் அனுபவித்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார் .
அதிக ஜுரம் இருந்ததாகவும். உணவு சுவை மறந்து மூன்று வாரங்களுக்கு மேலாக உணவில் நாட்டம் இல்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு வாந்தி பிரச்சனை இருந்ததாகவும், அதனால் தரையில் புரண்டு கிடந்ததாகவும் கூறியுள்ளார்.