சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 911 ஆக இருந்தது. தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.
இந் நிலையில், சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பேக்கரிகள் திறந்திருக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது.