‘சாஹோ’ வெளியீட்டுக்கு முன்பாகவே பிரபாஸ். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் பிரபாஸ் . இந்த படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

கொரோனா அச்சத்துக்கு இடையே ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பை முடித்துத் திரும்பியது படக்குழு.

வெளிநாட்டிலிருந்து திரும்பியதால், கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் பிரபாஸ்.

இதனிடையே,ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுக் கேள்விகள் எழுப்பி வந்தார்கள்.

இதற்கு யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போதைய சூழலில் பலரின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது. நாங்கள் எங்களுடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்துள்ளோம். இவை அனைத்தும் முடிந்தபிறகு, பல அப்டேட்டுகளுடன் வருவோம் என்று உறுதியளிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.