கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன..
இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சல்மான் கான் நடித்து வரும் ‘ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்’ படத்தின் படப்பிடிப்பும் ரத்தாகியுள்ளதால் படக்குழுவில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு மார்ச் 26-லிருந்து ஏப்ரல் 2 வரை இந்தப் படக்குழுவில் வேலை செய்ய இருந்தவர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் சல்மான் கான் பணம் போட்டுள்ளார்.