கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தினக்கூலிப் பணியாளர்களுக்காக தனது ஓராண்டு ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் என்னுடைய சக தொழிலாளிகள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்படாமல் இருக்க என்னுடைய ஓராண்டு சம்பளமான ரூ. 2.5 கோடியை வழங்குகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்