சென்னை:
டில்லி நிஜாமுதீன் மத மாநாட்டுக்கு சென்று, திரும்பிய 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் இஸ்லாமியர்கள் மத மாநாட்டில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அதிக பட்சமாக இன்று மட்டும் புதிய 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதையடுத்து மொத்த எண்ணிக்கை 234 ஆக உயர்ந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.