https://www.instagram.com/p/B-bwyUgnFdD/
“வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் சமீரா ரெட்டி . தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2015-ல் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாக இந்த வருட துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் சமீரா.
சமீபத்தில் கூட நிறைமாத கர்ப்பிணியாக தண்ணீருக்குள் ஃபோட்டோ ஷூட் நடத்தியிருந்தார் . கடந்த மாதம் ஜூன் 12ம் தேதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு “நைரா” என பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் சமீரா ரெட்டி தற்போது மகன் , மகளுடன் தான் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் .