விழுப்புரம்:
கொரானா அச்சுறுத்தல் மற்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளதால், விழுப்புரத்தில் 6,7.8 ஆகிய 3 வார்டுகளும் சீல் வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விழுப்புரத்திலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த நபர் வசித்து வந்த பகுதி மற்றும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சீல் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், கொரோனா தொற்று காரணமாக, விழுப்புரத்தில் 6,7.8 ஆகிய 3 வார்டுகளும் சீல் வைக்கப்படும், அப்பகுதி சுகாதார துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது, அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற தடை தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.
அப்பகுதி மக்களுக்கு தேவையான பொருள்கள் வீடுகளுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.