2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக பார்த்திபன் கூறியிருப்பதாவது :-

உலக மகிழ்ச்சி தினமின்று! 30 நிமிடங்கள் கழித்து உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு. ஆனால் 7 நீண்ட வருடங்கள் கழித்தே மட்டமான சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.