‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் தனுஷ்.

ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .இப்படத்தில் தற்போது நடிகை லட்சுமி பிரியா மற்றும் கெளரி கிஷனும் இணைந்துள்ளனர்.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் ஒரு வீடு போன்ற அமைப்பில் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த காட்சியில் நடிக்கும் நடிகர்கள் பற்றி தெளிவாக தெரியவில்லை என்றாலும், அது தனுஷும் கதாநாயகியும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விரைவில் படத்தின் முதல் லிரிக் வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நடராஜன் சுப்ரமணியன் இந்த படத்தில் நடித்துவருகிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் தனுஷ் பிறந்தநாளில் ரிலீசாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் முதல் லிரிக் வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நடராஜன் சுப்ரமணியன் இந்த படத்தில் நடித்துவருகிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் தனுஷ் பிறந்தநாளில் ரிலீசாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.