வினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஹெலன்’.
ஒரு இளம்பெண் ஃபிரீஸர் ரூமில் ஒரு இரவு மாட்டி கொள்கிறாள் . அவள் எப்படியெல்லாம் அந்த குளிரில் அவதி படுகிறாள் . மீண்டு வந்தாளா இல்லையா என்பதே கதை .
இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக்காகிறது. இதில் அருண் பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கவுள்ளனர்.
‘ஹெலன்’ ரீமேக்கை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல் இயக்கவுள்ளார் . தனது ஏ.பி நிறுவனத்தின் மூலம் அருண்பாண்டியன் இந்த படத்தின் ரீமேக்கை தயாரிக்கவும் உள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை நேற்று (பிப்ரவரி 7) சென்னையில் நடைபெற்றது.