சென்னை:

ர்பார் திரைப்படம் தனக்கு  இன்னொரு பாட்சா என ரஜினிகாந்த் பேசியதை நம்பியே படத்தை வாங்கினோம் என்று விநியோகஸ்தர் திருவேங்கடம் கூறி உள்ளார்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தர்பார் படம் , பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தற்போது 70வயதை எட்டியுள்ள ரஜினி, அதற்கு தகுந்த வேடத்தில் நடிக்காமல், இன்னும் நயன்தாராவுடன் டூயட் பாடுவது போலவும், சண்டை காட்சிகளில் பறந்து பறந்து தாக்குவது போன்ற காட்சிகளும் இருந்ததால், இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களிடையேயும் வரவேற்பு பெறவில்லை.

இதனால் படம் வெளியான ஒருசில நாளிலேயே தியேட்டர்கள் காற்றுவாங்க, கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய விநியோகஸ்தர்கள் தலையில் துண்டைபோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக விநியோகஸ்தர்களை சந்திக்க ரஜினி மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விநியோகஸ்தர் திருவேங்கடம் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார்.

தர்பார் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனக்கு இது  இரண்டாவது பாட்ஷாவாக அமையும் என்று கூறினார்.   அதேபோல இயக்குனர் முருகதாசும்,   கடைசி இருபது நிமிடம் இந்த படத்தின் காட்சிகள்  மிக விறுவிறுப்பாக இருக்கும் என்றும்  இப்படிப்பட்ட திரைப்படம்  முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்றார். டைரக்டர், ரஜினி என அனைவரும் தர்பார் படம் குறித்து நம்பிக்கையூட்டும் வகையில் இவ்வாறு கூறியதால், நம்பிக்கை அடிப்படையில் படத்தை வாங்கினோம். ஆனால் படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார்  25 சதவீதம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நஷ்டம் ஏற்பட்டதை தெரிவிக்க ரஜினியிடம் கோரிக்கை மனுவை கொடுக்க சென்றோம். ஆனால்,எங்களை அனுமதிக்க மறுத்து விட்டார்கள்,   ராகவேந்திரா மண்டபத்திற்கு சென்று சுதாகரிடம் தெரிவிக்கும்படி கூறினர். ஆனால் மனுவை சுதாகர் வாங்க மறுத்துவிட்டார் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  எங்களுக்கு பணம் வேண்டாம் ஆனால் ரஜினியை சந்தித்து பிரச்னையை சொன்னால் மட்டும் போதும்  என்று சுதாகரிடம் முறையிட்டதாக தெரிவித்துள்ள  திருவேங்கடம், தர்பார் படத்தினால் தான் மட்டுமின்றி, சினிமா மாவட்டமான 8 இடத்தின் வெளியிட்டாளர்களும் நஷ்டத்தில் தான் இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும், படத்தை தயாரித்த  லைக்காவிடம் விளக்கம் கேட்டதற்கு எங்களுக்கு 60 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், தர்பார் திரைப்படதில் 70% பணம் ரஜினி, முருகதாஸ்க்கு வழங்கப்பட்டதால் அவர்களிடம் கேளுங்கள் என்று கைவரித்து விட்டது என்றும் திருவேங்கம் தெரிவித்தார்.