ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.

பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தர்பார் திருவிழாவாக கொண்டாடினர்.

படம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது .

ஆனால் படம் நஷ்டமடைந்ததாக கூறி நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க விநியோகஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.65 கோடி கொடுத்து தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களுக்கான இழப்பீட்டு தொகையை ரஜினிகாந்த பெற்றுத் தர வேண்டுமென விநியோகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சுமந்த் ராமன் தன்னுடைய ட்விட்டரில் ஹிந்தி நடிகர்களே 20 % முன்பணம் தான் ஒரு படத்திற்கு வாங்குவார்கள் ஆனால் இங்கே 100 % வாங்கிவிடுவதாக விநியோகஸ்தர் ஒருவர் சொன்னதாக ட்வீட் செய்துள்ளார் .

மேலும் இன்று மதியம் விநியோகஸ்தர்கள் ரஜினியின் வீட்டை முற்றுகையிடுவதாகவும் பதிவிட்டுள்ளார் .