‘பட்டாஸ்’ தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் கவனம் செலுத்தியுள்ளார் தனுஷ்.

ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படத்தில் நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளாராம். இதை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்துவார் தனுஷ் எனத் தெரிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிற நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை, தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தனுஷ் கையில், நீண்ட வாளுடன் உள்ளவாறு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைபபடம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,