சென்னை:
போலி பத்திரிகையாளர்கள் நேர்மையாகவா சொத்து சேர்த்துள்ளார்கள்? அவர்கள் குறித்து விசாரிக் க சிறப்பு குழுவை அமைக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொன்மாணிக்க வேல் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக இருந்தபோது, முறைகேடு செய்ததாக, பத்திரிகை யாளர் போர்வையில் ஒருவர் வழக்கு தொடர்ந்து, இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு அமர்வு, மனுதாரரின் அட்டையாள அட்டைகளை வாங்கி பரிசோதனை செய்தபோது, அவர் போலி பத்திரிகையாளர் என்பது தெரிய வந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பத்திரிகையாளர் என்ற பெயரை மோசடிப் பேர் வழிகள் ஏராளமானோர் தமிழகத்தில் உள்ளதாகவும், அவர்களே பத்திரிகையாளர்கள் சங்கங்களை போலி நிருபர்களே நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் நேற்று (21.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் மனோகரன், தமிழகத்தில் எத்தனை பத்திரிகைகள் உள்ளன. அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஆஜரான காவல்துறை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், போலி நிருபர்கள் தொடர்பாக வெவ்வேறு இடங்களில் ஏராளமான புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதன் மாவட்ட வாரியான விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிருபர்கள் என்ற பெயரில், பலர் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டுவதும், தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகி வருகின்றன.
சந்தேகிக்கப்படும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் விற்பனை அளவு என்ன? அதன் உரிமையாளரின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் நேர்மையாகத் தான் அந்தச் சொத்தை சம்பாதித்துள்ளார்களா? என்பது தொடர்பாக, தேவைப்பட்டால் சிறப்பு குழு அமைத்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பத்திரிகைகளின் விற்பனையைத் தணிக்கை செய்யும் நிறுவனத்தை இந்த வழக்கில் தானாக முன் வந்து இணைத்த நீதிபதிகள், தமிழக அரசு, காவல்துறை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 5- ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.