
கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்தவர் எஸ்.பி.சரண்.தற்போது வெப் சீரிஸில் கால் பதித்துள்ளார்.
‘அதிகாரம்’ என்று தலைப்பிடப்பட்ட வெப் சீரிஸை இயக்கி, தயாரிக்கவுள்ளார் எஸ்.பி.சரண்.குத்துவிளக்கேற்றி இதன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்துள்ளார்எஸ்.பி.பி.
‘அதிகாரம்’ அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான கதைக்களத்துடன் தயாராகிறது.
இந்தத் தொடரில் ’வெள்ளைப்பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், ‘சூது கவ்வும்’ சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளராக ராஜேஷ் யாதவ், எடிட்டராக பிரவீன் கே.எல், இசையமைப்பாளராக தீனா தேவராஜன், கலை இயக்குநராக ரெமியன், சண்டைப் பயிற்சியாளராக ஸ்டண்ட் செல்வா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
[youtube-feed feed=1]