நடிகர் பார்த்திபன் தற்போது ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே. அதாவது பார்த்திபன் மட்டுமே இந்த படத்தில் நடித்துள்ளார்.

பார்த்திபனின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.இந்த படத்தை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்த பெரிய 🥇விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.