
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் புகழேந்தி அவர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
விக்கிரவாண்டி பிரச்சார கூட்டத்தில் பகுதி வளர்ச்சிக்காகவும் சமுதாய வளர்ச்சிக்காகவும் தி.மு.க ஆற்றிய பணிகளை விளக்கினார்
குறிப்பாக சமுதாய வளர்ச்சிக்காக அர்ப்பணித்து கொண்ட தலைவர்களை கவுரவிக்க தி.மு.க செய்த செயல்களை எடுத்துரைத்தார்
குறிப்பாக எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு சிலை வைப்பதற்காக வாழப்பாடி திரு ராமமூர்த்தி அவர்கள் கோரிக்கை வைத்தததையும் அதனை தான் மேயராக இருந்த நேரத்தில் வாழப்பாடி திரு ராமமூர்த்தி அவர்கள் முன்னிலையில் கலைஞர் அவர்கள் திறந்து வைத்ததையும் நினைவு கூறினார்.
இதற்க்கு நன்றி தெரிவித்து வாழப்பாடி திரு இராம. சுகந்தன் அவர்கள் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
[youtube-feed feed=1]நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் வன்னிய சமுதாய பெருந்தலைவர் ராமசாமி படையாச்சியார் சிலையை அமைக்க கோரிக்கை வைத்தது எனது தந்தை வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் தான் என்று திமுக தலைவர் திரு @mkstalin வரலாற்று நிகழ்வினை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது ! pic.twitter.com/SVTHfEqzx5
— வாழப்பாடி இராம.சுகந்தன்/ Rama Suganthan (@vazhapadi) October 13, 2019