சிவகங்கை:

திருப்புவனம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.50லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை பதுக்கியவர்கள் தப்பி ஓட்டிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கிளாதரி அருகே மணப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருவர் சின்ன கருப்பு, அவரது மனைவி வீர லட்சுமி இவர்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக செம்மரக்கட்டை களை வாங்கி,  வீட்டில் உள்ள  மரம் இளைக்கும் மிஷின் மூலமாக செம்மரக்கட்டைகளை துண்டுதுண்டாக நறுக்கி நைசாக இளைத்து சாக்கு மூட்டையில் கட்டி வெளிநாட்டுக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பூமாதேவி பிரபு ஆகியோர் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, வீட்டினுள் மிஷின் மூலமாக செம்மரக்கட்டைகளை துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டதும், செம்மரக்கட்டை தூள்களும் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் ரெய்டு வருவது குறித்து தகவல் அறிந்த

இந்தத் தகவலை அறிந்த  போலிசார் வருவதை அறிந்த சின்ன கருப்பு அவரது மனைவி வீரலட்சுமி மகன் ஊர் காவலன் மற்றும் தினேஷ் உள்பட அனைவரும் தப்பி சென்றனர். அங்கிருந்த 16 க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டை மூடைகளை போலீசார் கைப்பற்றி சிவகங்கை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தப்பிச்சென்ற சின்னக்கருப்பன் அவரது மனைவி வீரலட்சுமி இவர்களது மகன் ஊர்காவலன் மற்றும் தினேஷ்யை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

-பொதிகை குமார்